தேனி: கனமழை காரணமாக மஞ்சளார் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளார் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 322 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து விநாடிக்கு 291 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டுவரும் நிலையில், விநாடிக்கு 40 கன அடி நீர் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு திறக்கப்படுகிறது.
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மஞ்சளார் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.