சென்னை : தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என்பதால் இந்த அதிரடி ரெய்டு நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஸ்ட்ராபெரி க்விக் மெத்’ எனப்படும், போதைப் பொருள் விற்பனை நடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அதிரடி ரெய்டு நடத்தப்படுகிறது. இதற்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. .
இந்த போதைப்பொருளில், ஸ்ட்ராபெரி வாசம் வீசும். இனிப்பு சுவையுடன் வாயில் போட்டவுடன், ‘டப்’ என வெடிக்கும். இந்த சத்தத்திற்காகவே மாணவர்கள் இதை வாங்குகின்றனராம். ஏற்கனவே கஞ்சா நடமாட்டம் அதிகம் இருக்கும் நிலையில் இவ்வாறு புது புது வகையான போதை பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.