திருப்பூர்: உடுமலை நகராட்சியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்பவர்களால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் அனுஷம் திரையரங்கம் பின்புறம், மத்திய பஸ் நிலையம் அருகில் எம் ஆர் காம்ப்ளக்ஸ் அருகில், ராஜேந்திர ரோடு, தளிரோடு அர்பன் வங்கி அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. தைப்பூசம் வள்ளலார் தினத்தை முன்னிட்டு கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
ஆனால் அரசு கடைகளை மையமாகக் கொண்டு நபர்கள் கடைகள் அருகில் விற்காமல் அனுஷம் நகர் 100 அடி ரோடு, காந்தி சவுக்கு கல்லறை தோட்டம் பகுதி, குட்டைதிடல் பகுதியில் காரில் வைத்து விற்பனை, தளிரோடு ரயில்வே மேம்பாலம் அருகில் தொலைபேசி மூலமாக டோர் டெலிவரி விற்பனை அமோகமாக கூடுதல் விற்பனைக்கு மது விற்பனை நடைபெற்றது. இது குறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், உடுமலைப் பகுதியில் அன்றாடம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. விடுமுறை நாட்களில் 2 மடங்காக விற்பனை நடைபெறுகிறது.
இதற்காக பார் உரிமையாளர்கள் விடுமுறைக்கு முன்தினம் மதுவை அதிகமாக வாங்கி வைத்து அதிக விலைக்கு மது விற்பனையில் ஈடுபட்டு வரும் ஆசாமிகள் மீது உடுமலைக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஎஸ்பி நமச்சிவாயம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.