கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மணிமுக்தா நதி அருகே அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர் 2 நாட்களாக பெய்த லேசான மழைக்கே இடிந்து விழுந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணிமுக்தா நதி அருகே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர், 2 நாட்களாக பெய்த லேசான மழைக்கே இடிந்து விழுந்தது. கள்ளக்குறிச்சி – திருவண்ணாமலை 4 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் 126 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மணிமுக்தா நதியின் குறுக்கே கட்டப்பட உள்ள மேம்பாலம், வெள்ளத்தில் அடித்து செல்லாமல் இருக்க தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. 2 நாட்கள் பெய்த லேசான மழைக்கே தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.
இது மக்கள் மத்தியில் வெகுவாக அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.