சென்னை: தேனியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி நகர காவல் ஆய்வாளர் உதயக்குமார் தலைமையிலான போலீசார் அவர் மீது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். புழல் சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு சவுக்கு சங்கர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட உத்தரவு நகல் சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு உள்ளது.