கேரளா: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை கேரள வங்கி தள்ளுபடி செய்துள்ளது. கேரள வங்கி என்பது மாநில அரசிற்கு சொந்தமான கூட்டுறவு வங்கியாகும். வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலையிலும் ஒரு கிளை உள்ளது. இந்த சூரல்மலை கிளையில் கடன்பெற்று, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோரின் கடன்களை தள்ளுபடி செய்வதாக கேரள வங்கி அறிவித்துள்ளது.