டெல்லி: வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரளா மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். வயநாடு நிலச்சரிவு குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை 30ம் தேதி நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலச்சரிவுகளால் கேரள மாநிலம் வயநாட்டில் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை, வெள்ளேரிமலை, வைத்திரி உள்ளிட்ட பல கிராமங்கள் உருக்குலைந்து போயுள்ளன.