சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கான சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று (அக்.5) மற்றும் நாளை (அக்.6) பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்கள், கோவை, நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் பலத்த காற்று மற்றும் மின்னலுக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
அக்.7 மற்றும் 8-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
