புதுடெல்லி: நவம்பர் மாதம் பரிசோதிக்கப்பட்ட 111 மருந்து மாதிரிகள் தரமற்றவை என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. பிரபலமான நிறுவனங்களின் பிராண்ட் பெயர்களைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத மற்றும் அறியப்படாத உற்பத்தியாளர்களால் சில மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
அத்தகைய மருந்துகள் அடையாளம் காணப்பட்டு சந்தையில் இருந்து அகற்றப்படுவதை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில், மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த நவம்பர் மாதம் பல்வேறு மருந்து மாதிரிகளை சோதனை செய்தது. இதில் 41 மருந்து மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டது. இதேபோல், மாநில மருந்துப் பரிசோதனை ஆய்வகங்கள் மூலம் பரிசோதிக்கப்பட்ட 70 மருந்துகள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.