சென்னை: கஸ்தூரிபா நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில், அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி ஆகிய இடங்களில், பழைய பொருட்கள் சேகரிப்பு முகாம், ஜூலை, 13 மற்றும் 14ல் நடக்கிறது.
இதுகுறித்து, சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேவையில்லாத பழைய பொருட்களை, என்ன செய்வது என தெரியாமல், பலர், வீடுகளில் வைத்துள்ளனர். அவை அவர்களுக்குத் தேவையற்ற பொருள்களாகவும், மற்றவர்களுக்குப் பயன்படும் பொருள்களாகவும் இருக்கின்றன. எனவே, பழைய பொருட்களை ஏழை மக்களிடம் இருந்து பெற்று, குப்பைக்கு செல்லாமல் தடுக்கும் நோக்கில், பழைய பொருட்கள் சேகரிப்பு முகாம், ஜூலை, 13 மற்றும் 14ம் தேதிகளில், 3 இடங்களில் நடக்கிறது.
அடையாறு, கஸ்தூரிபா நகர் சமூக நலக்கூடம் 13ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், 14ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும். திருவான்மியூரில் உள்ள தர்ஷனீஸ்வரர் நகர் இளைஞர் உடற்பயிற்சி கூடத்திலும், வேளச்சேரி விஜிபி சீதாபதி நகர் உஷா சாலையில் 13ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், 14ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும் நடக்கிறது.
புத்தகங்கள், காகிதங்கள்: மின் கழிவுகள், சுத்தமான கிழிந்த துணிகள், காலணிகள், புத்தகங்கள், காகிதங்கள், காலி மாத்திரை உறைகள், பால்பாயிண்ட் பேனாக்கள், பொம்மைகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை நன்கொடையாக அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 8667499135 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.