தர்மபுரி: தமிழகம் முழுக்க இதுவரையிலான கணக்கெடுப்பில் 2.92 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மழை வெள்ளத்தால் தமிழகத்தில் 2 லட்சத்து 92 ஆயிரத்து 450 ஹெக்டேர் நிலங்களில் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர், மழையால் 33 சதவீதம் வரை பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.