இரும்புலியூர்; சென்னை அருகே இரும்புலியூர் கோயில் தீமிதி திருவிழாவில் குண்டத்தில் விழுந்த 3 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. உடன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை, தாம்பரம் அருகே இரும்புலியூரில் உள்ள நாகவல்லி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் குண்டம் இறங்கி நடந்தபோது நிலை தடுமாறி விழுந்த மூன்று பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதிமுக முன்னாள் கவுன்சிலர் மாணிக்கம் என்பவர் தனது மனைவி தனலட்சுமியுடன் சேர்ந்து தீ மிதித்தபோது அவர்களுடன் சென்ற அன்பழகன் என்பவரும் குண்டத்தில் விழுந்தார்.