ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழையில் 60% ஒரே மணி நேரத்தில் பெய்துள்ளதாக, சென்னையில் நேற்று பெய்த மழை குறித்த புள்ளி விவரத்தை தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மே மாதம் மழை பெய்துள்ளதும், ஜூன், ஜூலை மாதங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நேற்று பகலில் வெயில் அதிகமாக இருந்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் சில புள்ளிவிவரங்களை அளித்துள்ளார்.
தென்சென்னை, ஈசிஆர், ஓஎம்ஆர், சிறுச்சேரி, கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளதாகவும், சென்னையில் ஜூலை மாத சராசரி மழையில் 60% நேற்று ஒரு மணி நேரத்தில் பெய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கடந்த 1996-ம் ஆண்டு முதல் ஜூலை மாதத்தில் சென்னையில் அதிக மழை பெய்துள்ளது என்றும் அவர் கூறினார். ஜூலை மாதத்தில் சராசரி மழையளவு 100 மி.மீ., ஆனால் நேற்று ஒரு மணி நேரத்தில் 60 மி.மீ., மழை பெய்துள்ளதாக தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.