திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காமராஜர் நகரை சேர்ந்த அல்தாப் தாசிப் (36) என்பவர் தனது தனியார் நிதி நிறுவனம் தொடங்கி தீபாவளி பண்டிகை சீட்டு மற்றும் நகை சேமிப்பு திட்டங்களை நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். அவர் மீதான வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இந்நிலையில், அல்தாப் தாசிப்பின் மேலாளராக பணியாற்றி வந்த வாலாஜா பகுதியை சேர்ந்த வசந்தகுமார் என்பவர், அல்தாப்பின் மனைவி சப்ரீன் பேகம் (32), அவரது மகள் அல்வினா மரியம் (3) ஆகியோரை வெளியூருக்கு காரில் அழைத்து செல்வது வழக்கம். 18.11.2024 அன்று அவர்களையும் சென்னைக்கு அழைத்துச் சென்று கடத்திச் சென்று, சப்ரீன் பேகத்தின் தாயாரை ஹயாத்தின் பேகம் தொடர்பு கொண்டு ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, ஹயாத்தின் பேக் அளித்த புகாரின் பேரில், ராணிப்பேட்டை போலீஸார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். பணத்தை கொடுக்க சம்மதித்த ஹயாத்தின், வசந்தகுமாரை மாந்தாங்கல் அருகே வருமாறு கூறி பணம் தருவதாக கூறி அழைத்து சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் வசந்தகுமாரை விரட்டிச் சென்று கைது செய்தனர்.
அவருடன் இருந்த கும்பலைச் சேர்ந்த பார்த்திபன் (35), யேசுதாஸ் (30), சரத்குமார் (31), ருத்ரேஸ்வரர் (30), கோமதி (35), வினோத் (35), கார்த்திக் (34) ஆகிய 7 பேரும் கைது செய்யப்பட்டனர். .
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கடத்தப்பட்ட இருவரையும் போலிஸார் மீட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய இரண்டு கார்களையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.