சென்னை: இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- பொங்கல் பண்டிகை வரும் ஜன., 14-ல் கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து, ஜன., 15, 16, 18, 19 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை விட உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஜன.17 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.
இக்கோரிக்கைகளை ஏற்று, மாணவர்கள், அவர்களது பெற்றோர், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாட, சொந்த ஊருக்குச் செல்ல தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு 17-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து, அதை ஈடுகட்ட ஜனவரி 25-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொங்கல் விடுமுறை குறித்து, தற்போதைய அரசு அறிவிப்பின்படி, ஜனவரி 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 6 நாட்கள் விடுமுறை. போகி பண்டிகைக்கு விடுமுறை இல்லாவிட்டாலும், மத விடுமுறை உண்டு. அரசு அதிகாரிகளும், ஆசிரியர்களும் எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. கடந்த 11, 12, 13 ஆகிய 3 நாட்களும் அரசு விடுமுறை என்பதால் மொத்தம் 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.