திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே கிளியூர் பெரிய ஏரி வெளிநாட்டு பறவைகளின் வருகையால் வனப்பகுதியாக காட்சியளிக்கிறது. எனவே அரசு இந்த ஏரியை பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பறவைகள் மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் நெருங்கிய நண்பர்கள். இத்தகைய பறவை இனங்கள் பொதுவாக தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப நாடு விட்டு நாடு இடம் பெயர்கின்றன.
இவ்வகையில், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்த கிளியூர் கிராமத்தில், சுமார் 380 ஏக்கர் பரப்பளவில் உள்ள கிளியூர் ஏரிக்கு, ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஜனவரி இறுதி வரை, 180-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வந்து செல்கின்றன. இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஐரோப்பிய, கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் இருந்து பறவை இனங்கள் வரத் தொடங்கியுள்ளன.
தற்போது, அரிவாள் மூக்கன், உன்னி கொக்கு, பாம்பு தாரா, மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் நாரை, கொண்டாய் நீர் காகம், ஊசிவால் வாத்து, நீலச்சிறவி வாத்து, பழுப்பு கீச்சான்கள் உள்ளிட்ட பறவை இனங்கள் வரத் தொடங்கியுள்ளன. மேலும், கிளியூர் ஏரி இயற்கையாகவே ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்லும் இடமாக உள்ளது. இங்கு வரக்கூடிய பறவை இனங்கள் இங்கு கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. தற்போது இந்த ஏரியில் போதிய தண்ணீர் இருந்தும் ஏரியில் காட்டு சதுப்புநில செடிகள் துளிர்விட்டு ஏரியை ஆக்கிரமித்து உள்ளது.
இதை வனத்துறையினர் அகற்றி, ஏரியின் நடுவில் பறவை இனங்கள் வந்து தங்கும் வகையில் மரங்கள் நட ஏற்பாடு செய்ய வேண்டும். இதுபோன்ற நீர்நிலைகளை பறவைகள் சரணாலயமாக அறிவித்து பாதுகாத்து பறவை இனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். கல்லணையிலிருந்து சுமார் 5 கிலோமீற்றர் தொலைவில் இந்த ஏரி அமைந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ளது.
இந்த ஏரியை அரசு பறவைகள் சரணாலயமாக மாற்றினால் கல்லணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த பெரிய ஏரியில் பறவைகளை காண வருவார்கள். இதன் மூலம் இப்பகுதி வளர்ச்சியடைந்து பொதுமக்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும். அரசின் வருமானமும் பெருகும். இதனால், பெரிய ஏரியை பறவைகள் சரணாலயமாக மாற்றி, ஆண்டுதோறும் பல வகையான பறவைகள் தங்கும் வகையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.