திண்டிவனம்: திண்டிவனம் கிடங்கல் ஏரி நிரம்பி வெளியேறும் வெள்ள நீரால் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் அருகே கிடங்கல் ஏரி நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் பிரதான சாலையில் உள்ள கருணாவூர் தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டு 10 கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஜக்காம்பேட்டை,கன்னிகாபுரம்,கேணிப்பட்டு உள்ளிட்ட கிராம மக்கள் வெள்ள நீரை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் விரைவில் உயர்மட்ட பாலம் கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளனர்.