திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் சட்டக் கல்லூரி மாணவி ரகளை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் ஊழியரை ஆபாசமாகத் திட்டி, காலால் எட்டி உதைத்ததாக சட்டக் கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்தனர்.
உறவினருக்கு ஸ்கேன் எடுப்பதற்காக உடன் சென்றிருந்த கிரிஜா என்ற அந்த பாணவியை வரிசையில் நிற்குமாறு ஸ்கேன் ஊழியர் வில்லியம் சார்லஸ் கூறியதாக தெரிகிறது.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வில்லியம் சார்லசை அபாசமாக திட்டி உதைத்ததாக கூறப்படும் கிரிஜா மீது போலீசார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், பொது இடத்தில் ஆபாசமாகத் திட்டுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.