திண்டுக்கல்: கூகுள் மேப் பார்த்து வழி தவறி சென்று ஆற்று சகதியில் சிக்கிய கர்நாடகாவை சேர்ந்த நபரை திண்டுக்கல் மாவட்ட போலீசார் பத்திரமாக மீட்டனர்.
கூகுள் மேப் பார்த்து வழி தவறி சென்று, 5 மணி நேரமாக ஆற்று சகதியில் சிக்கி தவித்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தரை தமிழக போலீசார் பத்திரமாக மீட்டனர்.
மங்களூரைச் சேர்ந்த பரசுராமா என்பவர் சபரிமலைக்கு சென்றுவிட்டு 3 சக்கரவாகனத்தில் சென்றுவிட்டு திண்டுக்கல் மாவட்டம் வழியாக கர்நாடகா திரும்பியபோது வழிமாறி பட்டிவீரன்பட்டி அருகே ஆற்று சகதியில் சிக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணி வரை கரையேற முடியாமல் தவித்த நிலையில் கர்நாடக போலீசுக்கு பரசுராமா தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து தமிழக காவல்துறை அவர்கள் அளித்த தகவலின்பேரில் , வத்தலகுண்டு மற்றும் பட்டிவீரன்பட்டி போலீசார் ஒரு மணி நேரம் அலைந்து அவரை பத்திரமாக மீட்டு உணவளித்துள்ளனர்.