தஞ்சாவூர்: பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான ஆலோசனை மற்றும் விண்ணப்பம் பதிவு செய்தல் முகாம் நாளை 29ம் தேதி வரை நடக்கிறது என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மனிதநேய வார விழாவை முன்னிட்டு பட்டியிலினத்தவர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP), பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், மற்றும் கலைஞர் கைவினைத் திட்டம் ஆகிய திட்டங்களில் ஆலோசனை மற்றும் விண்ணப்பங்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
எனவே, ஆர்வமுள்ள பட்டியிலின மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் மேற்கண்ட திட்டங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பபிப்பதற்கான வழிகாட்டுதல்கள் பெற மாவட்ட தொழில் மையம், நாஞ்சிக்கோட்டை ரோடு, உழவர் சந்தை அருகில், தஞ்சாவூர்-6 என்ற முகவரியில் நேரடியாக நாளை 29.01.2025 வரை ஆகிய தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், மாற்றுச்சான்றிதழ் நகல், வங்கி புத்தக நகல், புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் இம்முகாமில் உடனடியாக விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆவணம் செய்யப்படும். மேலும் விபரங்கள் பெற திட்ட மேலாளர், உதவி இயக்குநர் பிருந்தாதேவி அவர்களை 8870066684 என்ற கைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.