சென்னை: இலங்கை அரசால் தேசியமயமாக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களின் படகுகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஏலம் விடப்பட்ட நிலையில், 2024-ம் ஆண்டு பிடிபட்ட படகுகள் ஏலம் விடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து 31 படகுகள், புதுக்கோட்டையில் இருந்து 14 படகுகள், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் 6 படகுகள், நாகையில் இருந்து 3 படகுகள், காரைக்கால் மாவட்டத்தில் இருந்து 5 படகுகள் என 67 படகுகள் அடங்கிய பட்டியலை இலங்கை நீரியல்வளத்துறை வெளியிட்டுள்ளது.