குமாரபாளையம்: பாதுகாப்பு நடவடிக்கைகள்… குமாரபாளையம் பகுதி காவிரி கரையோரம், வெள்ள பாதிப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம், தாசில்தார் சிவகுமார் தலைமையில் நடந்தது.
மாவட்ட வழங்கல் துறை அலுவலரும், மண்டல அலுவலருமான முத்துராமலிங்கம், பாதுகாப்பு நடவடிக்-கைகள் குறித்து அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, குமாரபாளையம் பகுதி காவிரி ஆற்றின் கரையோரம் வெள்ளப்பெருக்கின் போது பாதிக்கப்படக்கூடிய குடியிருப்பு பகு-திகளான அண்ணா நகர், பாலக்கரை, இந்திரா நகர், கலைமகள் வீதி, மணிமேகலை வீதி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பவர்-களை கணக்கெடுக்கும் பணியும், அவர்கள் வீட்டில் உள்ள மொத்த நபர்களை கணக்கிடும் பணியும் தொடங்கியுள்ளது.
இப்பணியை, குமாரபாளையம் வருவாய்த்துறை அலுவலர்களும், நில அளவையர்களும் தொடர்ந்து செய்து வருகின்றனர். இது-வரை, 132 வீடுகளில் கணக்கெடுப்பு பணி முடிவடைந்து, 423 பேர் வசிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், எஸ்.ஐ., தங்கவடிவேலன், ஆர்.ஐ., புவனேஸ்வரி, வி.ஏ.ஓ.,க்கள் முருகன், செந்தில், ஜனார்த்தனன், தியாகராஜன், ரஞ்சித்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.