தஞ்சாவூர்: கைவிரல் ரேகையினை பதிவு செய்யுங்கள் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெறும் மற்றும் PHH பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கைவிரல் ரேகையினை 28.02.2025க்குள் பதிவு செய்யப்பட வேண்டும்.
எனவே, AAY மற்றும் PHH பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் நியாய விலை கடைகளில் கைவிரல் பதிவு செய்யுமாறு ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.