சென்னை: டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சென்னையின் கிண்டியில் 15-வது ரெட்டிகான் மாநாட்டை நடத்தியது. “விழித்திரை சிகிச்சையில் முன்னேற்றங்கள்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 1500-க்கும் மேற்பட்ட விழித்திரை நிபுணர்கள், கண் மருத்துவத்தில் முதுகலை பட்டதாரிகள் மற்றும் பொது கண் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அமர் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற பேச்சாளர்கள் விழித்திரை சிகிச்சையில் முக்கியமான தலைப்புகளில் ஆறு அறிவியல் அமர்வுகளை வழங்கினர். மிகவும் சவாலான சிகிச்சை நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தும் ரெட்டினா பிரீமியர் லீக் என்ற அற்புதமான போட்டியும் நடைபெற்றது.

ரெடிகான் 2025 நிகழ்வு விழித்திரை நிபுணர்கள், முதுகலை மாணவர்கள் மற்றும் பொது கண் மருத்துவர்கள் நவீன நுட்பங்கள், புதுமையான அறுவை சிகிச்சை அணுகுமுறைகள் மற்றும் வளர்ந்து வரும் சிகிச்சை விருப்பங்களை ஆராய்ந்து கற்றுக்கொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியதாக அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அஷ்வின் அகர்வால், வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வீராசாமி, அகில இந்திய கண் மருத்துவர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் மோகன் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.