சென்னை: ”என்.சி.இ.ஆர்.டி., முதல், எம்.பி.,க்களுக்கு எழுதும் பதில்களுக்கு, நாள்தோறும் இந்தி திணிக்கப்படுகிறது,” என, சு. வெங்கடேசன் எம்பி மத்திய அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) ஆங்கில வழி பாடப்புத்தகங்களில் இந்தி தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது நாடு முழுவதும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆங்கில வழி பாடப்புத்தகங்களுக்கு ஹிந்தி தலைப்புகளை பயன்படுத்த தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) எடுத்த முடிவை கேரள அமைச்சர் வி.சிவன்குட்டி விமர்சித்திருந்தார். அதில், “மத்திய அரசின் இந்த முடிவு, நாட்டின் பன்முகத்தன்மையை குறைக்கும், கலாசார திணிப்பு, தர்க்கத்திற்கு புறம்பானது.

இந்த முடிவை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும்” என கண்டனம் தெரிவித்திருந்தார். இதனை மேற்கோள் காட்டி சு. வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஆங்கில வழி பாடப்புத்தகங்களின் தலைப்புகள் அனைத்தும் இந்தியில் உள்ளன.
ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால், அமைச்சர்களின் பதில்கள் இந்தியில் என்சிஇஆர்டி தொடங்கி எம்.பி.க்களுக்கு எழுதும் பதில்கள் வரை ஒவ்வொரு நாளும் இந்தி திணிக்கப்பட்டு வருகிறது. இனிமேல் எடப்பாடியாரை இந்தியில் எழுதுவாரா நயினார் நாகேந்திரன்? என்று அப்பட்டமான கேள்வியை எழுப்பியுள்ளார்.