சாதி மற்றும் ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டத்திற்கான பரிந்துரைகளை வழங்க ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்த பிறகு, பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டு, ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை திறம்பட செயல்படுத்த முதல்வர் தலைமையில் ஒரு குழுவை ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூட வேண்டிய குழு, கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே கூடியுள்ளது. குழுவின் தலைவராக உள்ள முதல்வர் இது குறித்துப் பேச மறுப்பது ஏன்?
இது தவிர, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவும், ஏடிஜிபி தலைமையிலான சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குழுவும் அனைத்தும் செயலற்ற நிலையில் இருக்கும்போது, மற்றொரு ஆணையத்தை அமைத்து யாரை ஏமாற்றுகிறார்கள்?’ என்று கேள்வி எழுப்பினார்.