புதுடெல்லி: சுதந்திர தினத்தன்று சிறப்பாக பணியாற்றியதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 23 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று காவல் துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. 3 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்படும். இந்த ஆண்டுக்கான விருதை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இம்முறை தெலுங்கானாவைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் வீரதீரச் செயல்களுக்கான விருதைப் பெறவுள்ளார். இருப்பினும் மற்ற இரண்டு பிரிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் விருதுகளைப் பெற்று வருகின்றனர்.
வன்னியபெருமாள், அபின் தினேஷ் மோடக் ஆகியோருக்கு சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 21 காவல்துறை அதிகாரிகளுக்கு திறம்பட சேவை செய்த பிரிவில் சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஐஜி கண்ணன், ஐஜி பாபு, கமிஷனர் பிரவீன்குமார், எஸ்பிக்கள் பெரோஜன் அப்துல்லா, சுரேஷ்குமார், கிங்ஸ்லின், ஷியாமளா தேவி, பிரபாகர், பாலாஜி சரவணன் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டிஎஸ்பிக்கள் டில்லி பாபு, மனோகரன், சங்கு ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல் ஏஎஸ்பிகள் ராதாகிருஷ்ணன், ஸ்டீபன் ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்ஸ்பெக்டர்களில் தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகர், சந்திரமோகன், ஹரிபாபு, தமிழ்ச்செல்வி ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த 3 எஸ்.ஐ.க்களுக்கும் குடியரசுத் தலைவர் சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வழக்கமாக தீயணைப்பு துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு 3 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டும் இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை.
அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு மத்திய உள்துறை சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கம்பெனி கமாண்டர் மூர்த்தி, பிளட்டூன் கமாண்டர் கலையழகன், ஏரியா கமாண்டர் பிளாட்பின் ஆகியோருக்கு உள்துறை விருதுகள் வழங்கப்படும்.