சென்னை : அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
2020 மார்ச் 10-க்கு முன் உயர்கல்வித் தகுதி பெற்ற அனைத்து ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து அனுப்ப, அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த விவரங்களை சரிபார்த்து ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இதனால் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.