சென்னை: வடபழனி அருள்மிகு வடபழனி ஆண்டவர் கோயிலில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் 2025-2026 கல்வியாண்டிற்கான பகுதிநேர மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பகுதிநேர பயிற்சிப் பாடநெறியின் காலம் 4 ஆண்டுகள். பகுதிநேர வகுப்புகள் காலை 06.00 மணி முதல் காலை 08.00 மணி வரை அல்லது மாலை 07.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடத்தப்படும். மேலும், ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர வகுப்புகள் நடைபெறும். ஓதுவார் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் 14 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை ரூ. 5000/- வழங்கப்படும். பகுதிநேர வகுப்புகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் www.vadapalaniandavar.hrce.tn.gov.in, www.hrce.tn.gov.in ஆகிய வலைத்தளங்களில் இருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தொடர்புடைய சான்றிதழ்களை துணை ஆணையர்/செயல்பாட்டு அதிகாரி, அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், வடபழனி, சென்னை – 600 026 என்ற முகவரிக்கு 13.10.2025-க்குள் அனுப்ப வேண்டும்.