தமிழகத்தில் நாளை (02-11-2024) சனிக்கிழமை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிவிப்பின்படி, பராமரிப்பு பணி இவர்களின் வழக்கமான பணிகளில் ஒன்றாகும். இதன் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வள்ளவிளை, கொல்லங்கோடு, உரம்பு, செங்கவிளை உள்ளிட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும். மதுரையில் எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
பெரம்பலூர் பகுதியில் உதயநத்தம், பிள்ளைபாளையம், உட்கோட்டை போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படுகிறது. தஞ்சாவூர், திருப்புறம்பியம், சுவாமிமலை பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் முடங்கியார், மலையபுரம், சூளக்கரை போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும்.
பொதுமக்களின் பாதுகாப்பை அரசு கருத்தில் கொண்டு, வீட்டில் உள்ள மின்சாதனங்கள் அதிகளவில் சேதமடையாமல் இருக்க, பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.