பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டையில் இந்திய மருத்துவ கழகம் சார்பில் போதைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை இந்திய மருத்துவ கழகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி மாரத்தான் போட்டி மற்றும் பள்ளி குழந்தைகளுக்குபோதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பயிற்சி கருத்தரங்கம் உள்ளிட்ட முப்பெரும் நிகழ்ச்சி இந்திய மருத்துவ கழகம் பட்டுக்கோட்டை தலைவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மீனா நியூட்ரான் தலைமையில் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது
முதல் நாளான இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியை வருவாய் கோட்டாட்சியர் சங்கர்
கொடியசைத்து துவக்கி வைத்தார் பேரணி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து துவங்கி பேருந்து நிலையம் மணி கூண்டு .மார்க்கெட் தலைமை தபால் நிலையம் வழியாக சென்று அரசு மருத்துவமனையில் நிறைவு பெற்றது இதில் ஏராளமான மருத்துவர்கள் பயிற்சி செவிலியர்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ப