தென்காசி: குற்றால அருவியில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவியில் நீராட வந்த ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தென்காசி மாவட்டம் தென்காசி குற்றாலம் உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று மாலை சிறிது நேரத்தில் மிதமான மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில் இன்று காலை தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அருவியின் கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் குற்றாலத்துக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர். குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.ஆனால், பழைய குற்றால அருவி, புலி அருவி, ஐந்தருவி ஆகிய இடங்களில் குளிக்க தடை விதிக்கப்படாததால், ஏராளமானோர் அங்கு சென்று குளித்தனர். குற்றாலத்தில் கடந்த 12-ம் தேதி ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால், அருவிகளின் கரைகள் சேதமடைந்து, சில பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் அருவிகளில் தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.