திருச்செந்தூர்: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று மதியம் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலில் நடைபெற்று வரும் பெருந்திட்டை வளாகப் பணிகளை பார்வையிட்டார். பின்னர், அவர் அளித்த பேட்டி:- பெருந்திட்டை வளாகப் பணியில் எச்.சி.எல்., நிறுவனம் மேற்கொண்ட 20 பணிகளில், 3 பணிகள் முடிவடைந்து, திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளது.
ராஜகோபுர பணிகள் துரிதப்படுத்தப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. 7 கோபுரங்களும் வரும் 20-ம் தேதி பாலாலயம் நடைபெற இருக்கிறது. புதிதாக தயாரிக்கப்பட்ட திட்டத்தின்படி, 122 பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டப்பட உள்ளன. ஏ மற்றும் பி பிரிவுகளில் 56 பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு முதல்வர் திறந்து வைக்கிறார்.
2025-ம் ஆண்டு இறுதிக்குள் கோவிலில் அனைத்து பணிகளும் நிறைவடையும்.கோவில்களில் திருக்குறள் ஓதும் முறைகள் குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ஜூலை 7ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும், வடக்கே வாரணாசி போன்ற கோவில்களில் உள்ளதைப் போல பக்தர்களின் அனைத்து தேவைகளும் நிறைவேறும். இவ்வாறு அவர் கூறினார்.