நாகர்கோவில்: கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் சிலைக்கும், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலம் கட்டுமானப் பராமரிப்புப் பணிகளை, ஒன்றியப் பொதுத்துறை நிறுவனமும், அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து வரும் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 5 நாட்கள் ஆய்வு செய்கின்றனர்.

இந்த ஆய்வுக் காலத்தில் (5 நாட்கள்) பொதுமக்கள் கண்ணாடிப் பாலத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது பயணத் திட்டத்தைத் திட்டமிடும் போது, இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.