By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ரூ.100 கோடி மதிப்பிலான 250 கிலோ கொக்கைன் கடத்தி வந்த 6 பேர் கைது
    1 Min Read
    உயிருடன்தான் இருக்கிறேன்… மீண்டும் வீடியோ வெளியிட்ட நெதன்யாகு
    1 Min Read
    துருக்கியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்
    1 Min Read
    ஈரான் புதிய தலைவர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு என அறிவிப்பு
    1 Min Read
    ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க போர்க் கப்பல்களை அனுப்புங்கள்… அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உதவ சாக்‌ஷம் செயலி அறிமுகம்
    1 Min Read
    ரீல்ஸ் எடுக்கும் போது விபரீதம்… துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு வாலிபர் பலி
    1 Min Read
    அனைத்து வீட்டு உபயோக எல்.பி.ஜி. பயனர்களுக்கும் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு
    2 Min Read
    சிறுநீரகம் சிறப்பாக இயங்க நீங்கள் செய்ய வேண்டியது இதைதான்!!!
    1 Min Read
    உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா… தீர்வுக்கு எளிய வழிமுறைகள்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கட்சிகளின் கொடி நிற பார்டரில் வேட்டி, சேலை, துண்டு தயாரிப்பு மும்முரம்
    1 Min Read
    வீட்டிற்கு இருந்துபடி தற்ொலை மிரட்டல் நாடகம்… தஞ்சையில் அதிர்ச்சி
    2 Min Read
    அதிகாலையில் மது விற்ற கும்பல்… விரட்டி பிடித்த நாம் தமிழர் கட்சியினர்
    1 Min Read
    அதிக முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்குமா?
    1 Min Read
    காலையில் உடற்பயிற்சி செய்தால் முகமும், தோலும் புத்துணர்ச்சியாகும்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: உலகின் 80 சதவிகித உணவு பொருள்களின் உற்பத்திக்கு காரணமாக தேனீக்கள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > உலகின் 80 சதவிகித உணவு பொருள்களின் உற்பத்திக்கு காரணமாக தேனீக்கள்
தமிழகம்

உலகின் 80 சதவிகித உணவு பொருள்களின் உற்பத்திக்கு காரணமாக தேனீக்கள்

Nagaraj
Last updated: April 9, 2025 6:34 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

சென்னை: தித்திக்கும் தேன் தரும் திறமை வாய்ந்த தேனீக்களின் விசித்திரமான வாழ்க்கை. வாட்ஸ்ஆப் ஐ முந்தும் வகையில் தகவல் பரிமாற்றம், அயல் மகரந்த சேர்க்கைக்கு அயராது உழைக்கின்றன தேனீக்கள்.

தேனீ உலகின் சுவாரஸ்யமான, நுணுக்கமான, ஆச்சர்யமான உயிரினம். அயல் மகரந்த சேர்க்கைக்கு முக்கிய காரணமாக இருக்கும் தேனீக்கள் தான் உலகின் 80 சதவிகித உணவு பொருள்களின் உற்பத்திக்கு காரணமாக உள்ளது.

உலகத்தின் ஐந்து வகையான தேனீக்கள் உள்ளது. அவை இந்திய தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத தேனீ, கொம்பு தேனீ, மலைத்தேனீ ஆகியவை. இதில் மனிதர்களால் வளர்க்கக் கூடியது இந்திய தேனீ, இத்தாலிய தேனீ மற்றும் கொடுக்கில்லாத தேனீ ஆகியவை ஆகும்.

ஒரு தேனி குடும்பத்தில் ஒரு ராணி தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள் மற்றும் பல்லாயிரம் வேலைக்கார பெண் தேனீக்கள் இருக்கும். இதில் ஆண் தேனீக்கள் 90 நாட்களும், வேலைக்கார தேனீக்கள் 70 நாட்களும், ராணி தேனீக்களுக்கு 2 வருடங்களும் ஆயுள் காலமாகும். ராணி தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும்தான் வேலை. ஆண் தேனீக்கள், ராணி தேனீயுடன் இனச்சேர்க்கை செய்வது தேன் கூட்டை பாதுகாப்பதும் கடமையாகும்.

மற்ற எல்லா வேலைகளையும் வேலைக்கார தேனீக்ள் செய்யும். உணவு சேகரிப்பது, தேன் கூடு கட்டுவது, தேனை பக்குவப்படுத்துவது, கூட்டை சுத்தமாக பராமரிப்பது வேலைக்கார பெண் தேனீக்களாகும். ஆனால் இவை முட்டையிடாது. தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது. தேன் கூட்டை அறுங்கோண வடிவத்தில் கட்டும். இதன் மூலம் இடந்தை வீணாக்காமல் முழுசாக பயன்படுத்த முடியும். ஆண் தேனீக்களுக்கு பெரிய அருங்கோண செல், வேலைக்கார தேனீக்களுக்கு சிறிய அருங்கோண செல் வடிவத்தில் கூடுகட்டிய பின், ராணி தேனீக்களுக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும். கூட்டின் கட்டுமானம் சரியாக இருந்தால் மட்டுமே ராணி தேனீ அதில் முட்டையிடும்.

பூக்களின் மகரந்தம், மதுரம் இரண்டும்தான் தேனீக்களின் உணவு. அப்போதைய பசிக்கு அப்போதே, சாப்பிடும். தேனை சேகரிப்பதற்கான காரணம், குளிர் காலங்களில் பூ பூக்காத காலங்களில் உணவு தட்டுப்பாட்டை சமாளிக்க மட்டுமே.

தேனீக்கள் தேன் சேகரித்து பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த உணவு பதப்படுத்தும் தொழில் நுட்பமாகும். தேன் தேடிச் செல்லும் வேலைக்கார தேனீக்கள் பூக்களின் மகரந்தத்தை உறிஞ்சி தன் உடலில் இருக்கும் தேன் பையில் சேகரித்துக் கொள்ளும் அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல் தேனீயின் வயிற்றில் இருக்கும் கொதிகளுடன் சேர்ந்து திரவமாக மாறிவிடும். கூட்டுக்கு திரும்பி வரும் தேனீக்கள் கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்த திரவத்தை வெளியில் கொண்டுவந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும்.

ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான் ஒரு துளி தேன் சேரும். கூட்டை பராமரிக்கும் தேனீக்கள், அந்த திரவத்தை கூட்டின் ஓரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி அதின் இஸ்வர்டோஸ் எனும் நொதியை சேர்க்கும். பிறகு அந்த திரவத்தில் இருந்து நீர் தன்மை வற்றிபோவதற்காக தன் இறகை ஆட்டி, ஆட்டி ஆவியாக்கும். பிறகு தேனை பாதுகாக்க ஒரு வகை மெழுகை பூசி வைக்கும். இத்தனை நடைமுறைகளுக்கு பிறகுதான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும். தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனீக்களுக்காக கூட்டில் விட்டுதான். எடுப்பார்கள். இந்த வேலை நடக்கும்போது ராணி தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.

இனபெருக்க காலத்தில் மட்டுமே ராணீ தேனீக்களுக்கு வேலை. அந்த சமயத்தில் ராணித் தேனீ உயரத்தில் பறந்து, எந்த ஆண் தேனீ தன்னை துரத்தி பிடிக்கிறதோ அதோடு மட்டுமே சேரும். இனச்சேர்க்கை முடிந்தவுடன் ஆண் தேனீ இறந்து விடும். இதன் பிறகு ராணி தேனீ முட்டையிடும். முட்டையில் இருந்து வெளிவரும் தேனீக்களை வேலைக்கார தேனீதான் வளர்ப்பு தாயாக வளர்க்கும்.

தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீக்கள் பகிர்ந்து கொள்ளும் முறை தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விட துல்லியமானது. யானை, ஆமைகளை விட கூர்மையான ஞாபக சக்தி உடையது தேனீக்கள். உணவு தேவைப்படும் போது ‘ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டு கூட்டுக்கு திரும்பும்.

You Might Also Like

கட்சிகளின் கொடி நிற பார்டரில் வேட்டி, சேலை, துண்டு தயாரிப்பு மும்முரம்

வீட்டிற்கு இருந்துபடி தற்ொலை மிரட்டல் நாடகம்… தஞ்சையில் அதிர்ச்சி

அதிகாலையில் மது விற்ற கும்பல்… விரட்டி பிடித்த நாம் தமிழர் கட்சியினர்

அதிக முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்குமா?

காலையில் உடற்பயிற்சி செய்தால் முகமும், தோலும் புத்துணர்ச்சியாகும்

TAGGED:accurate methodHealthHoneyinformation exchangeஉடல்நலம்தகவல் பரிமாற்றம்துல்லியமான முறைதேன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

கட்சிகளின் கொடி நிற பார்டரில் வேட்டி, சேலை, துண்டு தயாரிப்பு மும்முரம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?