சென்னை: வந்தே பாரத் ரயில், டிடி செய்தி சேனல் லோகோவைத் தொடர்ந்து இப்போது ஒன்றிய பாஜக. அரசு பிஎஸ்என்எல் லோகோவும் காவி நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது.
முந்தைய லோகோவில் ‘இந்தியாவை இணைப்போம்‘ என்று இருந்தது, தற்போது அது ‘பாரதத்தை இணைப்போம்‘ என மாற்றப்பட்டுள்ளது. மேலும், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணங்கள் பாஜக கொடியின் நிறங்களை ஒத்திருக்கின்றன.
புதிதாகக் கட்டப்பட்ட நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தவுடனே எங்கும் காவி. அதேபோல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பணிபுரியும் ஊழியர்களின் சீருடைகள் காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
இதனால் பாஜக பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சியின் காவி நிறத்தை புகுத்தி அரசு நிறுவனங்களை காவி நிறமாக்கும் செயலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.