சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் தீவிர புத்த மத பக்தர். 1956ல் நாக்பூரில் டாக்டர் அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறிய இடத்தில் வழிபாட்டுத்தலம் அமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் நாக்பூரில் உள்ள அந்த வழிபாட்டுத் தலத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிலிருந்து நாக்பூர் புத்த வழிபாட்டுத் தலத்திற்குச் செல்லும் யாத்ரீகர்களுக்கு ரயில் கட்டணத்தை முழுவதுமாகச் செலுத்தி அவர்களுக்கு உதவுவது வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு கூட, ஆம்ஸ்ட்ராங் நாக்பூருக்கு முழு சிறப்பு ரயிலையும் பதிவு செய்து, அனைவரையும் தன்னுடன் நாக்பூர் புத்த கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன்பு புத்த மதத்தின் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக, ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள தனது குடியிருப்புக்கு அருகில் புத்த கோவிலை கட்டினார். அங்கு மக்கள் தினமும் வழிபாடு செய்கின்றனர். பலர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு, புத்த கோவிலில் சிறிது நேரம் மௌனமாக அமர்ந்து விட்டு சென்றனர்.