புதுச்சேரியில் 2018ம் ஆண்டில் பேருந்து கட்டணம் உயர்ந்ததைத் தொடர்ந்து, தற்போது 6 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த கட்டண உயர்வு புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் யானம் பகுதிகளுக்கான அரசு பேருந்துகள் மற்றும் தமிழகத்துக்கான பேருந்துகளுக்கான கட்டணம் உயரும்.புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் ஒப்புதலுக்கு பிறகு, இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும்.
ஏசி வசதி இல்லாத டவுன் பேருந்துகளுக்கான கட்டணம் ரூ.5 இலிருந்து ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி டவுன் பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.10 இலிருந்து ரூ.13 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.டீலக்ஸ் ஏசி பேருந்துகளின் கட்டணம், குறைந்த பட்ச கட்டணம் ரூ.12 இலிருந்து ரூ.16 ஆக, அதிக பட்ச கட்டணம் ரூ.36 இலிருந்து ரூ.47 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேருந்துகளின் கட்டணம், புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ.,க்கு 0.75 பைசா இலிருந்து 0.98 பைசா ஆக உயர்த்தப்பட்டுள்ளது.புதுச்சேரி நகர பகுதிக்குள் ஏ.சி வால்வோ பேருந்தின் கட்டணம் தற்போது ரூ.2.21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதல் 30 கி.மீ.,க்கு கட்டணம் ரூ.54 இருந்து ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு முதல்வர் ரங்கசாமியின் அறிவிப்புக்கு பிறகு நடைமுறைக்கு வரும்.