திருத்தணி: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று சென்னை கவர்னர் மாளிகையில் இருந்து சாலை வழியாக திருமலை சென்றார். திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டலில் சுமார் 45 நிமிடங்கள் ஓய்வெடுத்துவிட்டு திருமலைக்கு புறப்பட்டார். தனியார் விடுதியில் கவர்னர் சிறிது நேரம் ஓய்வெடுத்த நிலையில், பைபாஸ் சாலையில் திருத்தணி நகரில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மதியம் 1.30 முதல் 2.15 மணி வரை போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டதால், தலைவாசல் முதல் திருத்தணி வரையிலான பைபாஸ் சாலையில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நண்பகலில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், பயணிகள், வாகன ஓட்டிகள், தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் கடும் அவதிக்குள்ளாகினர்.
மதியம் 2.15 மணிக்கு வட்டாட்சியர் வாகனம் திருத்தணியை கடந்ததும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. விடுதியில் சிறிது நேரம் ஓய்வில் இருந்த ஆளுநருக்கு திருத்தணியில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.