சென்னை: விரல் ரேகை பதிந்தால் மட்டுமே இனி காஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் விரல் ரேகையை பதிவு செய்யவில்லை எனில் சிலிண்டர் கிடைக்குமா என்ற குழப்பம் எழுந்துள்ளது.
மானிய விலை சிலிண்டர் பெறும் பயனாளிகளின் உண்மைத் தன்மை சரிபார்ப்பு பணிகள் நடக்கிறது. இதற்கு சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, அவர் காஸ் ஏஜென்சிக்கு சென்று, விரல் ரேகை பதிய வேண்டும். இப்பணியை, வரும் 31ம் தேதிக்குள் முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இப்படி திடீரென்று உத்தரவிட்டுள்ள நிலையில் மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். ஒருவேளை இந்த மாத இறுதிக்குள் இவ்வாறு விரல் ரேகை பதியாவிட்டால் சிலிண்டர் எடுக்க முடியாதா என்று கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.