டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 37-வது கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெறும். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆணையம் சார்பில் தொடர்ந்து கூட்டங்கள் நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 36 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 37-வது கூட்டம் அதன் தலைவர் தலைமையில் டெல்லியில் வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கோடைகால நீர் தேவையை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு பிரதிநிதிகள் வலியுறுத்த உள்ளதாக தெரிகிறது.