நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளியை கொலை செய்து கொள்ளையடித்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், எஸ்டேட் ஊழியர் தினேஷ் தற்கொலை குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட தினேஷ் வீட்டின் அருகே வசித்து வந்த சங்கர், ஆம்புலன்ஸ் டிரைவர் கபீர், தனியார் எலக்ட்ரீசியன் சுரேஷ் ஆகியோரை நேற்று நேரில் ஆஜராகுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
அதன்படி 3 பேரும் நேற்று காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினர். தற்கொலை செய்து கொண்ட தினேஷின் உடலை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றிய போது, சங்கர் மற்றும் டிரைவர் கபீரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின், மூவரும் மாலையில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர்களும் பின்னர் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்படுவார்கள் என காவல் துறை தெரிவித்துள்ளது.