தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வருகை புரிந்த மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் சிறப்பாக பணியாற்றிய 57 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் வருகை புரிந்தார். பின்னர் தஞ்சை சரகத்தில் 2024 ஆம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய 57 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் ஐஜி கார்த்திகேயன் பேசுகையில், போலீசார் அனைவரும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்று அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.
இதில் தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக், மாவட்ட எஸ்பிக்கள் தஞ்சாவூர் ஆசிஷ்ராவத், திருவாரூர் ஜெயக்குமார், மயிலாடுதுறை ஸ்டாலின், நாகை அருண் கபிலன் மற்றும் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.