சென்னை: நீலகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தை நோக்கி வீசும் மேற்குக் காற்றின் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், இன்று (ஆக.,4) முதல் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 8 ஆம் தேதி வரை. 9ம் தேதி ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை மலைப்பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். இன்று முதல் 7ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய குமரி கடலில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் 55 கி.மீ. சூறாவளி காற்றும் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.