சென்னை: சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென அந்த மையம் தெரிவித்துள்ளது.