சென்னை: இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- தமிழகத்தை நோக்கி வீசும் கிழக்குக் காற்றின் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று தமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் உள்பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும்.
காலையில் லேசான மூடுபனி இருக்கும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு நேரத்தில் உறைபனி பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், 8-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 9-ம் தேதி ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. 10 மற்றும் 11-ம் தேதிகளில் கடலோர தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் 11-ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக காலையில் லேசான மூடுபனி காணப்படும். நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எங்கும் குறிப்பிடத்தக்க மழை பதிவாகவில்லை.
பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவியதுடன், அதிகாலையில் லேசான பனிப்பொழிவும் காணப்பட்டது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை (குளிர்) படி, மலைப்பகுதிகளில் அதிகபட்சமாக குன்னூரில் 8.5 டிகிரி செல்சியஸ், உடஞ்சலில் 8.6 டிகிரி, கொடைக்கானலில் 10 டிகிரி செல்சியஸ், 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நிலவும் வறண்ட வானிலையால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைகிறதா என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரனிடம் கேட்டபோது, “தமிழகத்தில் வரும் 10, 11-ம் தேதி மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் வாபஸ் பெறவில்லை. வாபஸ் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் இல்லை.