சென்னை: பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து கோவைக்கு செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (வண்டி எண்-12675, 12243) வருகிற 8 மற்றும் 15-ந் தேதிகளில் இருகூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும். மேலும், இந்த ரெயில் கோவை ரெயில் நிலையத்தில் நிற்காது. போத்தனூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
தாம்பரத்தில் இருந்து மங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16159) வருகிற 16-ந் தேதி இருகூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் கோவை ரெயில் நிலையத்தில் நிற்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.