தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடியாவது பயனாளியை நேரில் சந்தித்து, அவருக்கு மருத்துவப் பெட்டகம் வழங்கி ஆற்றிய நலச்செயல்பாடுகளை பாராட்டினார். இந்நிகழ்வு ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவின் ஒரு பகுதியாகும்.

முதல்வர் ஸ்டாலின், சுந்தராம்பாள் என்ற 2 கோடியாவது பயனாளியை நஞ்சனாபுரத்தில் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து, அவருக்கு தேவையான மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார். தொடர்ந்து, வசந்தா என்ற மற்றொரு பயனாளியையும் சந்தித்து அவருக்கு வழங்கப்படும் இயன்முறை சிகிச்சைகளைப் பார்த்து, சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்.
இந்த “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம், 2021-ம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி, 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சேவைகள் மற்றும் மருந்துகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்குகிறது.
இந்த திட்டத்திற்கு, உலகளாவிய அளவில் பெரும் புகழ் பெற்றுள்ளது, 2024-ம் ஆண்டில் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுசபையிலான 79வது கூட்டத்தில் “United Nations Interagency Task Force Award 2024” விருது வழங்கப்பட்டது.
மேலும், முதல்வர் ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில், அரசின் பல்வேறு மருத்துவ திட்டங்களை அறிமுகப்படுத்தி, 121 கோடியே 56 இலட்சம் ரூபாய் செலவில் பல்வேறு புதிய மருத்துவ கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.