கொடைக்கானல்: கொடைக்கானலில் கடும் மூடுபனி மற்றும் சாரல் மழையும் பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். தற்போது, பொங்கல் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக, பகலில் வெயிலும், மாலையில் கடும் குளிரும் நிலவுகிறது. கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், உறைபனியும் இருந்ததால், மாறுபட்ட வானிலையை அனுபவித்து மகிழ்ச்சியடைந்தனர். இந்த சூழ்நிலையில், நேற்று காலை முதல் கொடைக்கானலின் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டம் நிலவுகிறது.
அடர்ந்த மூடுபனி காரணமாக, எதிர் திசையில் இருந்து வரும் வாகனங்கள் கூட தெரியவில்லை. மேகமூட்டமான வானிலையுடன் சாரல் மழையும் பெய்து வருவதால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.