திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. இதில் 14 துறைகளை சேர்ந்த மனுக்கள் பெறப்பட்டது.
இதில் பூண்டி சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்று வருவாய்த்துறை மின்சாரவாரியம் ஊரகவளர்ச்சி துறை கூட்டுறவு மாற்றுத்திறனாளிகள்துறை காவல்துறை வேளாண் உழவர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட 14 துறைகளைச் சேர்ந்த அலுவலர்களிடம் மனுக்களை பொதுமக்கள் வழங்கி நடவடிக்கைஎடுக்க வேண்டுகோள் விடுத்தனர்
இதில் பூண்டி நெய்வேலி நம்பாக்கம் அரியத்தூர் சோமதேவன்பட்டு வெள்ளாதுக்கோட்டை ஒதப்பை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்
இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன் பங்கேற்று விவசாயிகளுக்கு வேளாண்உபகரணங்களை பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பங்கேற்ற கிராம மக்களுக்கு பூண்டி ஒன்றியகுழு துணைத்தலைவர் மகாலட்சுமி கிறிஸ்டியுடன் இணைந்து அன்னதானமும் வழங்கினார்.